என் மலர்
செய்திகள்

விருதுநகரில் பெண் தகராறில் தொழிலாளி மீது தாக்குதல் - வாலிபர் கைது

விருதுநகர்:
விருதுநகர் மேற்கு பாண்டியன் காலனியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 64). இவர் கீழக் கடைத்தெருவில் பார்பர் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மருமகள் மாரிச்செல்வி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது சோலைக் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த கார்த்தி (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட தொடர்பால் மாரிச்செல்வி, கார்த்தியுடன் சென்று விட்டார்.
இது குறித்து தெரிய வந்ததும் மாரிச்செல்வியின் கணவர் மாரிச்சாமி, கார்த்தியை சந்தித்து தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்தி நேற்று சிவசுப்பிரமணியனிடம், உனது மகன் தேவையில்லாமல் தகராறு செய்கிறார்’ என கூறினார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கார்த்தி தன்னை தாக்கியதாக விருதுநகர் பஜார் போலீசில் சிவசுப்பிரமணியன் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி கார்த்தியை கைது செய்தனர்.