search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்.
    X
    தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்.

    திருச்சி- சார்ஜா விமானத்தில் திடீர் பழுது: பயணிகள் அவதி

    திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அவதிக்குள்ளான பயணிகள் தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #AirIndia
    கே.கே.நகர்:

    திருச்சியில் இருந்து ஷார்ஜாவிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் தினமும் அதிகாலை 2-30மணிக்கு வந்து மீண்டும் 3.20 மணிக்கு சார்ஜா புறப்பட்டு செல்லும்.

    இதையடுத்து வழக்கம் போல் இன்று அதிகாலை 2-30மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு சார்ஜா விமானம் வந்தது. அதில் பயணம் செய்ய இருந்த 103 பயணிகள், சோதனைக்கு பிறகு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். அப்போது விமானிகள், விமானத்தை இயக்கி பார்த்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அதனை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப குழுவினர் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து பயணம் செய்ய இருந்த 103 பேரும், திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். சரியான நேரத்தில் செல்ல முடியாததால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர். இன்று மாலை 5மணிக்கு விமானம் சார்ஜா புறப்பட்டு செல்லும் என ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் ஏர் இந்தியா விமானம் மோதி பறந்து சென்றது. அதில் சென்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதன்பிறகு திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு ரத்து செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று சார்ஜா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #AirIndia  #TrichyAirport
    Next Story
    ×