search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறிக்கை கசப்பாக இருந்தாலும் உண்மையை புரிந்து கொண்டதற்கு நன்றி- ரஜினிகாந்த்
    X

    அறிக்கை கசப்பாக இருந்தாலும் உண்மையை புரிந்து கொண்டதற்கு நன்றி- ரஜினிகாந்த்

    கடந்த 23-ந்தேதி வெளியிட்ட அறிக்கை கசப்பாக இருந்தாலும் உண்மையை புரிந்து கொண்டதற்கு நன்றி என ரசிர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். #rajinikanth #rajinikanthfans #dmk
    சென்னை:

    ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்காக அவரது ரசிகர் மன்றத்தை ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றினார். இந்த மன்றம் மூலம் புதிய கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்கான நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நிர்வாகிகள் சிலர் நீக்கப்பட்டனர். இதனால் ரசிகர்களிடம் அதிருப்தி ஏற்பட்டது. ரஜினியிடம் சொல்லாமல் நிர்வாகிகள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரஜினி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். அதில், ‘குடும்பத்தை கவனிக்காமல் மன்ற பணிக்கு வரக்கூடாது. வெறும் ரசிகர் மன்றத்தை வைத்துக் கொண்டு நாம் நினைத்ததை சாதிக்க முடியாது. ரசிகர் மன்றத்தில் இருந்தால் மக்கள் மன்றத்தில் பதவி பெறவோ, அரசியலில் ஈடுபடவோ தகுதி பெற முடியாது’ என்று கூறி இருந்தார்.

    ரஜினியின் இந்த அறிவுரைகளை விமர்சனம் செய்யும் வகையில் தி.மு.க. நாளிதழான முரசொலியில், ரசிகர்கள் பதில் சொல்வதுபோல ரஜினியை கடுமையாக சாடியிருந்தது.

    இதற்கிடையில் இன்று ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரஜினி காந்த் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘நான் கடந்த 23-ந்தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளை சொல்லி இருந்தேன். அது கசப்பாக இருந்தாலும் அதில் உள்ள உண்மையையும் நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    உங்களை போன்ற ரசிகர்களை அடைந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். ரசிகர்களையும் என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் போனாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான்’’ என குறிப்பிட்டுள்ளார். #rajinikanth  # rajinikanthfans  #dmk
    Next Story
    ×