search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அய்யப்பந்தாங்கலில் ஏடிஎம்மில் ரூ.64 லட்சம் திருடிய வங்கி ஊழியர் கைது
    X

    அய்யப்பந்தாங்கலில் ஏடிஎம்மில் ரூ.64 லட்சம் திருடிய வங்கி ஊழியர் கைது

    அய்யப்பந்தாங்கலில் 3 ஆண்டுகளில் சுமார் ரூ.64 லட்சம் பணத்தை ஏ.டி.எம். மூலம் திருடிய வங்கி ஊழியரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்திற்குள் இந்தியன் வங்கி கிளை உள்ளது. இதில் ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது.

    கடந்த 3 ஆண்டுகளாக ஏ.டி.எம்மில் அடிக்கடி பணம் குறைந்து வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர் போரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    விசாரணையில் ஏ.டி.எம். மையத்தின் பொறுப்பாளராக பணியாற்றி வரும் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த வங்கி ஊழியர் சுரேஷ் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை சுரேசை கைது செய்தனர். விசாரணையில் சுரேஷ் 11 வருடங்களாக வங்கியில் பணியாற்றி வந்ததும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் போரூர் கிளைக்கு வேலைக்கு வந்ததும் ஏ.டி.எம். மையத்தில் கள்ளசாவி போட்டு அடிக்கடி பணத்தை எடுத்ததையும் சுரேஷ் ஒப்புக்கொண்டார்.

    3 ஆண்டுகளில் சுமார் ரூ.64 லட்சம் பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுத்தது தெரியவந்துள்ளது தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×