search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி- முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
    X

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி- முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNGovt #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் கிராமம், ஆழங்காணிவிளையைச் சேர்ந்த பால்ரெத்தினம் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, லாரி மோதியதால், மின்கம்பம் உடைந்து அவர் மீது விழுந்து உயிரிழந்தார்.

    கடலூர் மாவட்டம், குமாரக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகள் நித்திஷா வயலில் விளையாடச் சென்ற போது, தேங்கிய மழை நீர் குட்டையில் மூழ்கி உயிரிழந்தார்.

    விழுப்புரம் மாவட்டம், தகடி கிராமத்தைச் சேர்ந்த முனியன் (லேட்) மனைவி சௌபாக்கியம் மீது மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

    திருநெல்வேலி மாவட்டம், வடகரை கீழ்பிடாகை கிராமத்தைச் சேர்ந்த அப்துல்கப்பார் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    திருநெல்வேலி மாவட்டம், மன்னார்கோவில் கிராமத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, பலத்த காற்றின் காரணமாக தவறி குளத்தில் விழுந்து மூழ்கி உயிரிழந்தார்.

    கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து மனைவி சுந்தரம் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார்.

    திருநெல்வேலி மாவட்டம், கிளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த முத்தையா மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

    கோயம்புத்தூர் மாவட்டம், கோலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் சாலை விபத்தில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

    இச்சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNGovt #TNCM #EdappadiPalaniswami
    Next Story
    ×