என் மலர்

    செய்திகள்

    மேச்சேரி அருகே ஆயுத பூஜை கொண்டாடியபோது மின்னல் தாக்கி விவசாயி பலி
    X

    மேச்சேரி அருகே ஆயுத பூஜை கொண்டாடியபோது மின்னல் தாக்கி விவசாயி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே ஆயுத பூஜை கொண்டாடியபோது மின்னல் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    மேச்சேரி:

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள பள்ளிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 42).

    இவர் நேற்று வீட்டில் ஆயுத பூஜை கொண்டாடிவிட்டு அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்று அங்குள்ள மோட்டார் அறையில் பூஜை செய்ய சென்றார். அப்போது இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது.

    அந்த நேரத்தில் மோட்டாருக்கு சந்தன பொட்டு வைத்துக் கொண்டிருந்த போது அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த முருகேசனுக்கு பூங்கொடி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
    Next Story
    ×