search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழைக்கால நோய்களை தடுக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்- கலெக்டர் பேச்சு
    X

    மழைக்கால நோய்களை தடுக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்- கலெக்டர் பேச்சு

    பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் சாந்தா பேசினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சியில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது;-

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் டெங்கு நோய் பாதிப்பு உள்ளது என்ற தகவல் கிடைத்தால் உடனடியாக அந்த கிராமத்தில் கொசுக்களை கட்டுப்படுத்த புகை மருந்து அடிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான தடுப்பு மருந்துகளுடன் போதிய முன்னேற்பாடுகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் சாக்கடைகளில் கழிவுநீர் தேங்காமல் இருக்க கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்யத்தேவையான முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொண்டு, கிராமங்களில் ஆங்காங்கே தேங்கி உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும், அதில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட்டு உலர வைத்த பின்னர்தான் தண்ணீர் ஏற்ற வேண்டும். அனைத்து கிராமங்களிலும் வினியோகிக்கப்படும் குடிநீர் ஆயிரம் லிட்டருக்கு 4 கிராம் பிளீச்சிங் பவுடர் கலந்து தினசரி குளோரினேசன் செய்யப்பட்டு வழங்க வேண்டும். மேலும், 

    பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×