என் மலர்
செய்திகள்

கையெழுத்திட நேரில் ஆஜராகவில்லை- கருணாஸ் மருத்துவ சான்றுகள் காவல்நிலையத்தில் சமர்ப்பிப்பு
நிபந்தனை ஜாமீனில் வந்துள்ள கருணாஸ் எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், மருத்துவ சான்றுகள் காவல்நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. #KarunasMLA #KarunasHospitalized
சென்னை:
நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் இன்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது மருத்துவமனையில் கருணாஸ் அனுமதிக்கப்பட்டிருப்பதால், காவல் நிலையங்களுக்கு கையெழுத்திட செல்லவில்லை. எனவே, அவரது வழக்கறிஞர்கள் காவல் நிலையத்திற்கு சென்று கருணாசின் மருத்துவச் சான்றுகளை வழங்கினர்.
இதுபற்றி அவரது வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் கூறுகையில், ‘கருணாஸ் நேற்று இரவு முதலே நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திடவில்லை’ என்றார்.
இதற்கிடையே 2017ம் ஆண்டு நெல்லையில் தேவர் பேரவை நிர்வாகியின் காரை சேதப்படுத்திய வழக்கு தொடர்பாக கருணாசிடம் விசாரணை நடத்துவதற்காக நெல்லை போலீசார் சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #KarunasMLA #KarunasHospitalized
நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் இன்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கு மற்றும் ஐபிஎல் போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தினமும் நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story