என் மலர்

  செய்திகள்

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு
  X

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. #Rain #IMD
  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை நேரத்தில் கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருகிறது. நேற்று இரவு ஒன்றிரண்டு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. இன்று காலை கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருகிறது. அதேவேளையில் சில இடங்களில் வானம் மேக மூட்டமும் காணப்பட்டது.

  இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் மழை செய்ய வாய்ப்பு உள்ளதாக வானிமை மையம் தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து வானிமை மையம் தெரிவித்துள்ள செய்தியில், ‘‘தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழை பெய்யலாம்’’ என்று தெரிவித்துள்ளது.
  Next Story
  ×