என் மலர்
செய்திகள்

செய்யாறு அருகே தோழி வீட்டிற்கு சென்ற இளம்பெண் திடீர் மாயம்
தோழி வீட்டிற்கு சென்ற இளம்பெண் திடீரென மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
செய்யாறு:
செய்யாறு அடுத்த ராந்தம் காலனியை சேர்ந்தவர் அருள்தாஸ் மகள் அனுராதா (21). சுங்குவார்சத்திரத்தில் உள்ள செல்போன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
கடந்த 23-ந்தேதி ஆற்காட்டில் உள்ள தோழி வீட்டிற்கு சென்று வருவதாக தந்தையிடம் கூறிவிட்டு அனுராதா வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
மீண்டும் வீடு திரும்ப வில்லை. எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது இதுவரை தெரியவில்லை. இதையடுத்து, அருள்தாஸ் மகளை காணவில்லை என மோரணம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து அனுராதாவை தேடி வருகின்றனர்.
Next Story