search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி உரிமையாளர் கொலை - ஜாமீனில் வந்து தலைமறைவானவர் 15 ஆண்டுக்கு பிறகு கைது
    X

    லாரி உரிமையாளர் கொலை - ஜாமீனில் வந்து தலைமறைவானவர் 15 ஆண்டுக்கு பிறகு கைது

    லாரி உரிமையாளர் கொலை வழக்கில் ஜாமீனில் வேளியே வந்து தலைமறைவானவரை 15 ஆண்டுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். #arrest

    கும்மிடிப்பூண்டி:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தவார்சிங், லாரி உரிமையாளர். இவர் கடந்த 2001-ம் ஆண்டு ராஜஸ்தானில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு லாரியில் வந்தார்.

    லாரியை ராஜஸ்தானை சேர்ந்த அப்துல் சலீம் ஓட்டினார். கிளீனராக பிரேம்சந்த் பொக்காரி இருந்தார்.

    கும்மிடிப்பூண்டி ஏரிக்கரை அருகே வந்த போது லாரி உரிமையாளர் தவார் சிங்கை கொலை செய்து விட்டு அவரிடம் இருந்த பணம் மற்றும் உடைமைகளை பறித்துவிட்டு அப்துல் சலீமும், பிரேம்சந்த் பொக்காரியும் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்துல் சலீம், பிரேம்சந்த் பொக்காரியை கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய கடந்த 15 ஆண்டுக்கு முன்பு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் சிக்காமல் இருந்தனர்.

    இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. ரமேஷ் உத்தரவுப்படி தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்முருகன், சுரேஷ், சபாபதி, அப்துல் காதர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் ராஜஸ்தான் சென்று கடந்த மாதம் அப்துல் சலீமை கைது செய்தனர். தலைமறைவான பிரேம்சந்த் பொக்காரியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ராஜஸ்தானில் பதுங்கி இருந்த பிரேம்சந்த் பொக்காரியை நேற்று மாலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×