search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரன்வீர்ஷா வீட்டில் பதுக்கியது திருவாரூர் கோவில்களில் திருடப்பட்ட சிலைகள்
    X

    ரன்வீர்ஷா வீட்டில் பதுக்கியது திருவாரூர் கோவில்களில் திருடப்பட்ட சிலைகள்

    ரன்வீர்ஷாவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் திருவாரூர் பகுதியில் உள்ள கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்பது தெரிய வந்துள்ளது. #IdolWingRaids #PonManickavel
    ரன்வீர்ஷாவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எப்படி? யாரால் திருடப்பட்டது? இவரிடம் விற்பனை செய்தது யார்? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சிலை திருட்டுக்கு அரசு அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும்.

    இது தொடர்பாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மாலைமலர் நிருபரிடம் இன்று கூறியதாவது:-

    ரன்வீர்ஷாவுக்கு இந்த சிலைகள் யார் மூலமாக எப்படி வந்தது என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. இதன் பின்னணியில் எப்படியும் மிகப்பெரிய நெட்வொர்க் இருக்கும் என்பதால் முழு அளவில் விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.

    எங்களது கை காசில் இருந்தே சிலைகளை எடுத்துச் சென்றுள்ளோம். வழக்கு செலவுக்காக முதலில் செலவு செய்து விட்டு பின்னர் எழுதி வாங்கும் நிலை போலீசில் மாற வேண்டும்.

    இந்த சிலைகளை ரன் வீர்ஷா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலான சிலைகளை ரன்வீர்ஷா தனது வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்துள்ளார்.

    சிலைகள் அனைத்தையும் கோர்ட்டில் ஒப்படைத்த பின்னர் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துவோம். தவறு செய்தவர்கள் தப்ப முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #IdolWingRaids #PonManickavel
    Next Story
    ×