என் மலர்

  செய்திகள்

  பண்ருட்டி அருகே வீடு புகுந்து தாக்கியதில் 4 பேர் படுகாயம்: கணவன்-மனைவி கைது
  X

  பண்ருட்டி அருகே வீடு புகுந்து தாக்கியதில் 4 பேர் படுகாயம்: கணவன்-மனைவி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீடு புகுந்து தாக்கியத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
  பண்ருட்டி:

  கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அங்கு செட்டி பாளையம் இருளர்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அய்யனார். அதே பகுதியை சேர்ந்தவர் குமார், அவரது மனைவி லட்சுமி (வயது 40).

  கடந்த மாதம் அய்யனார், குமார், லட்சுமி ஆகியோர் சென்னைக்கு செங்கல்சூளைக்கு வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு அய்யனாருக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

  இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வேலைக்கு சென்ற 3 பேரும் சொந்த ஊர் திரும்பினர். நேற்று மாலை அய்யனார் தனது வீட்டில் தந்தை கிருஷ்ணன், தாய் ராணி, தாத்தா கலியபெருமாள் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது குமாரும், அவரது மனைவி லட்சுமியும் இரும்பு கம்பியுடன் அய்யனார் வீட்டுக்குள் புகுந்தனர்.

  பின்னர் அவர்கள் அய்யனார், கிருஷ்ணன், ராணி, கலியபெருமாள் ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த 4 பேரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  இந்த சம்பவம் தொடர்பாக புதுப்பேட்டை போலீசில் அய்யனார் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து வீடு புகுந்து தாக்கிய குமார், அவரது மனைவி லட்சுமி ஆகியோரை கைது செய்தார்.
  Next Story
  ×