என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூர் அருகே மரத்தில் பஸ் மோதி 7 பேர் காயம்
    X

    திருப்பத்தூர் அருகே மரத்தில் பஸ் மோதி 7 பேர் காயம்

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே புளியமரத்தின் மீது பஸ் மோதி 7 பேர் படுகாமடைந்தனர். கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஈடுபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    திருப்பத்தூர்:

    கிருஷ்ணகிரியில் இருந்து இன்று காலை திருப்பத்தூர் நோக்கி பயணிகளுடன் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சினை டிரைவர் பாலாஜி (வயது 42). என்பவர் ஓட்டி வந்தார்.

    கந்திலி அருகே உள்ள சதாங்குட்டை என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்த போது பஸ்சை ஒரு பைக் முந்தி சென்றது. அந்த பைக் மீது பஸ் மோதாமல் இருக்க டிரைவர் பாலாஜி பஸ்சை நிறுத்த முயன்றார். அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதி நின்றது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த டிரைவர் பாலாஜி, கண்டக்டர் ராமலிங்கம் (38). விஜயகுமாரி (70). அசோக்குமார் (31). முருகன் (40). சென்றாயன் (55). லட்சுமி (50). 7 பேர் படுகாயமடைந்தனர்.

    கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஈடுபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    Next Story
    ×