search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்தி, பொழுதுபோக்கு, இசை- அதிமுக டெலிவி‌ஷனில் 3 சேனல்கள்
    X

    செய்தி, பொழுதுபோக்கு, இசை- அதிமுக டெலிவி‌ஷனில் 3 சேனல்கள்

    அ.தி.மு.க. டெலிவிஷனில் செய்தி சேனல், பொழுதுபோக்கு சேனல், இசை என 3 சேனல்கள் தொடங்கப்பட உள்ளது. விரைவில் இதற்கான சோதனை ஒளிபரப்பு தொடங்குகிறது. #NewsJ #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க.வுக்காக ஜெயா டி.வி.யை மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார். அதே போல் ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழும் தொடங்கப்பட்டது.

    டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்பு ஜெயா டி.வி.யையும், நமது எம்.ஜி.ஆர். நாளிதழையும் தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் கைப்பற்றி விட்டனர்.

    இதனால் அ.தி.மு.க.வுக்காக “புரட்சித்தலைவி நமது அம்மா” என்ற பெயரில் புதிதாக நாளிதழ் தொடங்கப்பட்டது. அதில் அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ நிகழ்ச்சிகள் அறிக்கைகள் வெளியாகி வருகிறது.

    இதேபோல் அ.தி.மு.க.வுக்காக தனியாக டி.வி. சேனல்கள் தொடங்கவும் ஆலோசிக்கப்பட்டு வந்தது. அ.தி.மு.க. நிகழ்ச்சிகளுக்கு என்று தனியாக சேனல்கள் இல்லாததால் கட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப இயலாமல் போகிறது.

    இந்த குறையை போக்கவும், அரசின் சாதனைகளை ஒளிபரப்பவும், எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்கவும் தனியாக செய்தி சேனல் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    மூத்த அமைச்சர்கள் கூடி இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    அதன்படி செய்தி சேனல், பொழுதுபோக்கு சேனல், இசை என 3 சேனல்கள் தொடங்கப்பட உள்ளது. செய்தி சேனலுக்கு ‘நியூஸ் ஜெ’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.


    இதற்கான ‘லோகோ’வை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டனர்.

    மேலும் ‘நியூஸ் ஜெ’ டி.வி.யின் இணையதள முகப்பு, செல்போன் செயலி ஆகியவற்றையும் வெளியிட்டனர். தற்போது ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்புக்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் சோதனை ஒளிபரப்பு தொடங்கும் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் தொடக்க விழா சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது. #NewsJ #ADMK
    Next Story
    ×