என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரி அருகே கார் கவிழ்ந்து 3 பேர் காயம்
    X

    தருமபுரி அருகே கார் கவிழ்ந்து 3 பேர் காயம்

    தருமபுரி அருகே இன்று காலை நடுரோட்டில் கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தருமபுரி:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது 40). இவர் வேலூர் காமராஜர் நகரில் வசித்து வருகிறார்.

    குடும்பத்துடன் இவர் கருங்கடல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலய திருவிழாவுக்கு சென்று விட்டு காரில் வேலூர் திரும்பி கொண்டிருந்தார். இன்று காலை இந்த கார் தருமபுரியை அடுத்த பெரியாம்பட்டி அருகே வந்த போது எதிர்பாராத விதமாக கார் நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இதில் காரை ஓட்டி வந்த வேலூர் மூங்கல்பட்டியை சேர்ந்த டிரைவர் பிரகாஷ். ஸ்டீபன்ராஜ், அவரது மனைவி பிரமிலா (34) ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் 3 பேரும் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து ஸ்டீபன் ராஜின் குழந்தைகள் ஆரோக்கிய பபிதா, காசினி ஆகிய 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    Next Story
    ×