search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதவராவ்
    X
    மாதவராவ்

    குட்கா ஊழல் - மாதவராவின் உதவியாளர்கள் 4 பேரிடம் சி.பி.ஐ. அதிரடி விசாரணை

    குட்கா ஊழல் தொடர்பாக மாதவராவின் உதவியாளர்கள் 4 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இன்று நுங்கம்பாக்கத்தில் ஆஜரான அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #GutkhaScam
    குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் மாதவராவ் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்துள்ள நிலையில், புதுவையில் உள்ள மாதவராவின் ரசாயன ஆலையிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    புதுவை திருபுவனையில் உள்ள சீனிவாச கெமிக்கல்ஸ் என்ற பெயரில் அந்த ஆலை செயல்படுகிறது.

    இங்கு ஆந்திராவில் இருந்து மூலப்பொருட்களை கொண்டு வந்து சோப்பு ஆயில் தயாரித்து வெளியிடங்களுக்கு அனுப்புகிறார்கள்.

    இந்த ஆலையில்தான் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் 5 பேர் சோதனை நடத்தியுள்ளனர். அவர்கள் 10 மணி நேரமாக சோதனை மேற்கொண்டனர். பல்வேறு ஆவணங்களையும் எடுத்து சென்றனர்.

    இது தொடர்பாக மாதவராவின் உதவியாளர்கள் 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

    இதனை ஏற்று 4 பேரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று ஆஜரானார்கள். அவர்களிடம் ரசாயன ஆலை தொடர்பாகவும், குட்கா ஊழல் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல மாதவராவின் உறவினர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குட்கா ஊழலில் தொடர்புடையதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சி.பி.ஐ. காவலில் இருக்கும் நிலையில் மேலும் 6 பேர் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதன் மூலம் குட்கா வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GutkhaScam
    Next Story
    ×