என் மலர்
செய்திகள்

வடமதுரை மின் நிலையத்தில் வயர்கள் திருட்டு
வடமதுரை மின் நிலையத்தில் பூட்டை உடைத்து வயர்கள் திருடப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடமதுரை:
வடமதுரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக அலுமினிய கம்பிகள் வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை அலுவலகத்துக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மின் வயர்கள் திருடப்பட்டு இருந்தது.
இது குறித்து மின் வாரிய உதவி பொறியாளர் மகேஸ்வரி வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யலூர் அருகே உள்ள கந்தமநாயக்கனூரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மின் வயர்கள் அறுத்து திருடப்பட்டன. தொடரும் இது போன்ற திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யார்? என தெரியாததால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பீதியடைந்துள்ளனர்.
Next Story