என் மலர்

  செய்திகள்

  சென்னைக்கு கிருஷ்ணா நீர் ஒருமாதத்தில் கிடைக்க வாய்ப்பு
  X

  சென்னைக்கு கிருஷ்ணா நீர் ஒருமாதத்தில் கிடைக்க வாய்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆந்திராவின் ஸ்ரீசைலம் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழையால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் கிருஷ்ணா நீர் ஒருமாதத்தில் சென்னைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Poondidam #KrishnaWater
  ஊத்துக்கோட்டை:

  சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.

  கிருஷ்ணா தண்ணீர் பங்கீடு திட்டப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் வழங்க வேண்டும்.

  கண்டலேறு அணையில் தற்போது நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி இரண்டாம் தவணையாக ஜூலை மாதத்தில் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கவில்லை. பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

  இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் வெறும் 13 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது (மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி) நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் பூண்டி ஏரியில் மீன்கள் தொடர்ந்து செத்து மிதந்து வருகின்றன.

  போதிய நீர் இல்லாததால் பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் திறப்பு கடந்த ஏப்ரல் முதல் வாரத்திலேயே நிறுத்தப்பட்டது. பேபி கால்வாயில் மட்டும் 10 கனஅடி தண்ணீர் சென்னை வாட்டர் போர்டு அனுப்பி வந்தது.

  கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் திறப்பு முற்றிலும் நின்று உள்ளது.

  எனவே கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்தால் மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்புவது சாத்தியமாக உள்ளது.


  இதற்கிடையே ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் 10 நாட்களுக்கு முன் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. இதனால் ஸ்ரீசைலம் அணை நிரம்பி வழிகிறது.

  இங்கிருந்து கோமசிலா அணைக்கு தண்ணீர் திறந்துவிட முடிவு செய்துள்ளனர். இந்த தண்ணீர் கண்டலேறு அணைக்கு வந்த பிறகு பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

  ஸ்ரீசைலம் - பூண்டி இடையே 438 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இதில் ஸ்ரீசைலம் - சோமசிலா இடையே தூரம் 111 கிலோ மீட்டர். எனவே அடுத்த மாதம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு திறந்துவிடப்படும்.

  பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஆயிரத்து 123 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 10 சதவீதம் ஆகும்.

  வீராணம் ஏரி இப்போது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அங்கிருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. கிருஷ்ணா நீரும் பூண்டி ஏரிக்கு வரும்பட்சத்தில் சென்னை குடிநீர் தேவையை முழு அளவில் பூர்த்தி செய்ய முடியும். #Poondidam #KrishnaWater
  Next Story
  ×