என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதன் டிரைவரை கைது செய்தனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையை அடுத்துள்ள கோவிலூரில் கிழக்கு கடற்கரை சாலையில் ரவுண்டானா அருகே முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வரப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் நாகை மாவட்டம் தாணிக்கோட்டகத்தை சேர்ந்த ரமேஷ்(வயது22) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ரமேசை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story