என் மலர்
செய்திகள்

சேலத்தில் மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை
சேலத்தில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டையாம்பட்டி:
சேலம் அருகே உள்ள வனவாசி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 73). இவர் அரியானூர் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து குணமடையும் வரை 3 மாத காலமாக அங்கேயே தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வந்தார். உறவினர்கள் யாரும் அருகில் இருந்து கவனிக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த அவர் இன்று காலையில் திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஆட்டையாம் பட்டி போலீசார், சுப்பிரமணி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Next Story