search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை- 694 மில்லி மீட்டர் பதிவு
    X

    மதுரை மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை- 694 மில்லி மீட்டர் பதிவு

    மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணியளவில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணியளவில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை நீடித்தது.

    இதனால் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் கொட்டும் மழையில் நனைந்தவாறு சென்றனர்.

    நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. சாலைகளின் பள்ளங்களில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    மதுரை மாட்டுத்தாவணி மற்றும் பெரியார் பஸ் நிலையங்கள் அருகே சாலையோரம் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரெயில் நிலையம் முன்பும், அதன் அருகில் உள்ள மேலவெளி வீதி சாலையிலும் தண்ணீர் வெள்ளம் போன்று பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன.

    போலீசார், போக்குவரத்தை சரி செய்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. இது போல் மதுரையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    தத்தனேரி மற்றும் மணிநகரம் ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கியது. அதே போன்று திருப்பரங்குன்றம் ரெயில்வே சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கியது.

    மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் தேங்கிய நீரை வெளியேற்றினர். ஆங்காங்கே மரங்களும் சாய்ந்து விழுந்தன.

    மதுரை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    சிட்டம்பட்டி-57 மி.மீ.

    கள்ளந்திரி-95 மி.மீ.

    தனியாமங்கலம்-69 மி.மீ.

    மேலூர்-53 மி.மீ.

    சாத்தையாறு-57 மி.மீ.

    வாடிப்பட்டி-35 மி.மீ.

    திருமங்கலம்-35 மி.மீ.

    உசிலம்பட்டி-7 மி.மீ.

    மதுரை தெற்கு-19 மி.மீ.

    தல்லாகுளம்-56 மி.மீ.

    விரகனூர்-15 மி.மீ.

    விமான நிலையம்-15 மி.மீ.

    இடையபட்டி-12 மி.மீ.

    புலிப்பட்டி-44 மி.மீ.

    சோழவந்தான்-36 மி.மீ.

    மேட்டுப்பட்டி-42 மி.மீ.

    குப்பனம்பட்டி-6 மி.மீ.

    கள்ளிக்குடி-9 மி.மீ.

    பேரையூர்-4 மி.மீ.

    டி.ஆண்டிப்பட்டி-33 மி.மீ.

    மதுரை மாவட்டத்தில் 694 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது 35 மில்லி மீட்டர் சராசரி ஆகும்.

    Next Story
    ×