என் மலர்
செய்திகள்

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் மீது வழக்கு
புதுவையில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார் பாளையம் பவளக்காரன் சாவடியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 27). டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் கார்த்திகேயன் அதே பகுதியில் பிளஸ்-2 படிக்கும் ஒரு மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.
இதுபற்றி அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து குழந்தைகள் நல குழுவிடம் முறையிட்டனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நலக்குழு சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தது.
அதனை ஏற்ற சீனியர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராகுல் அலுவால் இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் கார்த்திகேயன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story