என் மலர்
செய்திகள்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கருப்பசாமி பாண்டியன், முல்லைவேந்தன் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தனர்
சென்னை:
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த கருப்பசாமி பாண்டியன் அந்தகட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.க.வில் இருந்தும் விலகினார்.
இது போல் தி.மு.க. ஆட்சியின் போது அமைச்சராக இருந்த முல்லை வேந்தன் தி.மு.க.வில் இருந்து விலகி தே.மு.தி.க.வில் சேர்ந்தார். இருவரும் மீண்டும் தி.மு.க.வில் சேர முடிவு செய்தனர்.
இன்று காலை, கருப்பசாமி பாண்டியன், முல்லை வேந்தன் ஆகியோர் அண்ணா அறிவாலயம் சென்றனர். அங்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தனர்.
அப்போது தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் இரா.ஆவுடையப்பன், திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளர் மு.அப்துல் வஹாப்- திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன், தருமபுரி மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி, சட்டமன்ற உறுப்பினர் பி.என்.பி.இன்பசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர். #DMK #MKStalin