என் மலர்

  செய்திகள்

  நெல்லை மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் திடீர் மாயம்
  X

  நெல்லை மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் திடீர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் திடீரென மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  நெல்லை:

  நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பரதர் உவரியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகள் நிரோஷா (வயது 21). இவள் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.

  கடந்த 16-ந் தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி நிரோஷா, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைப்பற்றிய தகவல் கிடைக்காததால், நேற்று அவரது தாயார் ஜெனி உவரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி நிரோஷாவை தேடி வருகிறார்கள்.

  பாளையங்கோட்டை அருகே உள்ள மேலகுளம் கீழுரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வாசுதேவகி (வயது 33). இவர் வல்லநாடு அருகே உள்ள ஒரு தனியார் ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 26-ந் தேதி வேலைக்கு சென்ற வாசுதேவகி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் கிடைக்காததால், அவரது தாயார் நாச்சியார் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×