என் மலர்tooltip icon

    செய்திகள்

    அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை- தயாளு அம்மாள் இன்று மாலை வீடு திரும்புகிறார்
    X

    அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை- தயாளு அம்மாள் இன்று மாலை வீடு திரும்புகிறார்

    சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இன்று மாலை வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #DhayaluAmmal
    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சில மாதங்களாக வயோதிகம் காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். கருணாநிதி மறைவை தொடர்ந்து அவர் துயரத்தில் இருந்தார்.

    இந்தநிலையில் நேற்றிரவு தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.

    டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சில உடல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. தயாளு அம்மாளை மகள் செல்வி மற்றும் குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள். ராஜாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோர் சென்று பார்த்தனர்.


    தி.முக. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தயாளு அம்மாவை பார்த்துவிட்டு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்தார். அவர் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் அவர் இன்று மாலை வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #DMK #DhayaluAmmal #MKStalin
    Next Story
    ×