search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பழனி வந்த வாஜ்பாய் அஸ்திக்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி
    X

    பழனி வந்த வாஜ்பாய் அஸ்திக்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி

    பழனிக்கு வந்த வாஜ்பாய் அஸ்திக்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

    பழனி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 17-ந் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருடைய அஸ்தி பல்வேறு புண்ணிய நதிகளில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக பழனிக்கு வாஜ்பாய் அஸ்தி இன்று காலை கொண்டு வரப்பட்டது.

    பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட வாஜ்பாய் படத்துக்கு முன்பாக அஸ்தி வைக்கப்பட்டது. அங்கு கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்திய பிறகு பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், வணிகர் சங்கத்தினர், பொதுமக்கள் என ஏராளமானோர் வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, செம்பட்டி, திண்டுக்கல் மற்றும் தேனி வழியாக கொண்டு செல்லப்பட்டு நாளை மதுரை வைகை ஆற்றில் அஸ்தி கரைக்கப்பட உள்ளது.

    Next Story
    ×