என் மலர்

  செய்திகள்

  வாஜ்பாய் மறைவு: கோவையில் 3 பஸ்கள் கல் வீசி உடைப்பு- கடைகள் அடைப்பு
  X

  வாஜ்பாய் மறைவு: கோவையில் 3 பஸ்கள் கல் வீசி உடைப்பு- கடைகள் அடைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி கோவையில் 3 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டது. #AtalBihariVajpayee #RIPVajpayee
  கோவை:

  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி கோவையில் ஒரு சில இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடியது.

  இந்த நிலையில் பஸ்கள் மீது கல் வீச்சு சம்பவம் நடைபெற்றது. கோவை காந்திரபுரத்தில் இருந்து சித்ராவுக்கு தனியார் டவுன் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ் இன்று காலை 10.30 மணியளவில் பெண்கள் பாலிடெக்னிக் பகுதியில் சென்று கொண்டு இருந்தது.

  அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். இதில் பஸ்சின் முன் பக்க மற்றும் பின் பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதற்குள் பஸ் மீது கல் வீசிய மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

  இந்த சம்பவம் நடைபெற்று சற்று நேரத்தில் ஒண்டிப்புதூரில் இருந்து மணியக்காரன் பாளையத்திற்கு தனியார் பஸ் வந்தது.

  இந்த பஸ் மணீஸ் பள்ளி சந்திப்பு பகுதியில் வந்த போது மர்ம நபர்கள் இந்த பஸ் மீதும் கல் வீசினார்கள். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. இந்த இரு சம்பவங்கள் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது.

  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரு கல் வீச்சு சம்பவத்திலும் ஒரே நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

  பஸ்கள் கல் வீசப்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளதா? அதில் கல் வீசியவர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  கோவை காந்திபுரத்தில் இருந்து ஆலாந்துறைக்கு இன்று அதிகாலை அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ் போளூவா பட்டி பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் பஸ் மீது கல் வீசினார்கள். இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து சிதறியது.

  இது குறித்து அரசு பஸ் டிரைவர் ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் மீது கல் வீசிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். கோவையில் 3 பஸ்கள் மீது கல் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை உள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee
  Next Story
  ×