என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் - ஸ்டாலின்
Byமாலை மலர்16 Aug 2018 12:07 PM GMT (Updated: 16 Aug 2018 12:07 PM GMT)
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #MKStalin
சென்னை:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக குழாய் நோய்த்தொற்று, சிறுநீர் பாதை நோய்த்தொற்று, மார்பு வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி மற்றும் மூத்த மந்திரிகள் நேற்று அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நிலை விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இன்று வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து வருத்தமடைகிறேன். விரைவில் அவரது உடல்நிலை குணமடைய வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #MKStalin
Next Story
×