என் மலர்
செய்திகள்

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை- திருநாவுக்கரசர்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டியுள்ளார். #RahulGandhi #Thirunavukkarasar
சென்னை:
முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7-ந்தேதி உயிரிழந்தார். அவரது உடல் ராணுவ மரியாதையுடன் மெரினா அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள், ஏராளமான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிலையில், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை என்று தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

ராகுல் காந்திக்கு சரியான பாதுகாப்பு அளிக்காத தமிழக காவல்துறைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், ராஜாஜி அரங்கத்தில் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். #RahulGandhi #Thirunavukkarasar
Next Story






