search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி அருகே கருணாநிதிக்கு நினைவிடம் கட்டிய தி.மு.க.வினர்
    X

    பொள்ளாச்சி அருகே கருணாநிதிக்கு நினைவிடம் கட்டிய தி.மு.க.வினர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பொள்ளாச்சி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புதிதாக கட்டப்பட்ட நினைவிடத்தில் தி.மு.க.வினர் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
    பொள்ளாச்சி:

    முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி நேற்று முன்தினம் காலமானார். இதனையடுத்து அவரது உருவ படத்துக்கு தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாக சென்றும், கருணாநிதியின் உருவ படத்துக்கு மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    குள்ளக்காபாளையத்தை சேர்ந்த தி.மு.க. வினர் கருணாநிதியின் உருவ படத்துக்கு மலர் மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும், கும்மி அடித்தும் அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அவைத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், செயலாளர் சண்முக சுந்தரம் உள்பட தி.மு.க.வினர் கருணாநிதி உருவ படத்துடன் அவருக்கு நினைவிடம் கட்டி உள்ளனர்.

    புதிதாக கட்டப்பட்டுள்ள நினைவிடத்தில் தி.மு.க.வினர் மற்றும் பொது மக்கள் கருணாநிதிக்கு மலர்வளையம் வைத்தும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
    Next Story
    ×