என் மலர்
செய்திகள்

கருணாநிதி உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்
பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் சென்னை வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். #RIPKarunanidhi
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை 10.20 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள ஐஎன்எஸ் அடையாளர் கடற்படை தளத்திற்கு வந்து சேர்ந்தார்.
அங்கிருந்து கார் மூலம் ராஜாஜி அரங்கம் வந்தடைந்த அவர், கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நிர்மலா சீதாராமன், பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். #RIPKarunanidhi #ModiTributesKarunanidhi

Next Story