என் மலர்

  செய்திகள்

  குழந்தைகள் பாலியல் குறித்து இணையதளத்திலும் புகார் செய்யலாம்- கலெக்டர் தகவல்
  X

  குழந்தைகள் பாலியல் குறித்து இணையதளத்திலும் புகார் செய்யலாம்- கலெக்டர் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து இணையதளத்திலும் புகார் செய்யலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.
  திருவண்ணாமலை:

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழு மற்றும் இளைஞர் நீதிக் குழுமம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

  இதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், பாதுகாப்பற்ற தொடுதல் குறித்தும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம்
  www.ncpcr.gov.in
  என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் மின்னணு புகார் பெட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  இதில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடர்பான சம்பவம் நடைபெற்ற இடம், குற்றம் செய்த நபர், தொடர்பு எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

  குழந்தைகள் அல்லது பொதுமக்கள் இந்த இணையதளத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம்.

  மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றால் அது குறித்த புகார் போலீசாரிடம் அளிக்கப்பட வேண்டும்.

  பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளதாக தகவல் தெரிந்து அது குறித்த புகார்களை அளிக்க தவறும் பொதுமக்கள் மற்றும் புகாரினை பதிவு செய்ய மறுக்கும் அல்லது தவறும் அலுவலர்கள், அரசு பணியாளர்கள், தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் ஆகியோர் மீது 2012 பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 பிரிவு 21-ன் கீழ் 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே சேர்த்து தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×