search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி அருகே மரத்திலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி பலி
    X

    எடப்பாடி அருகே மரத்திலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி பலி

    எடப்பாடி அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறித்த தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    எடப்பாடி:

    எடப்பாடியை அடுத்த வெள்ளரிவெள்ளி கிராமம், தோப்புகாடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (55), மரம் ஏறும் கூலித் தொழிலாளி. இவர் இப்பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் தேங்காய் பறிக்கும் கூலி வேலை செய்து வந்தார். 

    இந்நிலையில் நேற்று மாலை வெள்ளரி வெள்ளியை அடுத்த காசிக்காடு பகுதியில் உள்ள பழனிசாமி (50) என்பவருக்கு சொந்தமாக தோட்டத்தில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த கணேசன் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×