என் மலர்
செய்திகள்

சோழவந்தானில் 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சோழவந்தானில் பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மதுரை:
மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மாணவி 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று அவரது தாயார் மற்றும் தங்கை மார்க்கெட்டுக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியிடம் தென்னை ஓலை வாங்க வந்த அதே ஊரைச் சேர்ந்த விஜயன் (40) என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறுமி கூச்சல் போட்டதும் அவர் தப்பி விட்டார்.
சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த தாயாரிடம் அந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து கூறி கதறி அழுதார்.
இது குறித்து சோழவந்தான் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விஜயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Next Story