என் மலர்

  செய்திகள்

  வீராணம் ஏரி தூர்வாரியதில் முறைகேடு- சி.பி.ஐ. விசாரணை கோரி விவசாய சங்கம் கூட்டத்தில் தீர்மானம்
  X

  வீராணம் ஏரி தூர்வாரியதில் முறைகேடு- சி.பி.ஐ. விசாரணை கோரி விவசாய சங்கம் கூட்டத்தில் தீர்மானம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வீராணம் ஏரியை தூர்வாரியதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி கடலூர் மாவட்ட விவசாய சங்கம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  கடலூர்:

  தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடலூர் மாவட்டக்குழு கூட்டம் கடலூரில் மாவட்ட தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கோ.மாதவன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி, துணைத் தலைவர்கள் கற்பனை செல்வம், ராமச்சந்திரன், மாகலிங்கம், சதானந்தம், துணை செயலாளர்கள் ஜெகதீசன், மூர்த்தி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

  கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  விவசாய நெருக்கடியை தவிர்க்க விவசாயிகளுடைய தற்கொலையை தடுக்க விவசாயிகளின் தேசிய வங்கி கடன், கூட்டுறவு வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

  கடலூர் மாவட்டத்தில் ஏரி, குளம், வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். வீராணம் ஏரிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44 கோடியை முழுமையாக செலவிட்டு பணியை முடிக்க வேண்டும். இதில் நடைபெற்று உள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

  கடலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். பெட்ரோலிய - வேதியியல் மண்டலம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

  என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு புதிய சட்டத்தின் அடிப்படையில் இழப்பீடு, வீட்டிற்கு ஒருவருக்கு வேலை, மாற்று இடம் வழங்க வேண்டும்.

  பயிர் இன்சூரன்ஸ் வாங்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. இன்சூரன்ஸ் நிலுவைத் தொகை உடனே வழங்கிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் வேலையை தொடங்கிட வேண்டும். விவசாய பணிகளோடு இதனை இணைத்திட வேண்டும்.

  மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9-ந் தேதி கடலூர் மாவட்டத்தில் கடலூர், நடுவீரப்பட்டு, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பெண்ணாடம், காட்டு மன்னார்கோவில், குமராட்சி, கீரப்பாளையம், புவனகிரி, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் செய்து, சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவது.

  மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  Next Story
  ×