என் மலர்

    செய்திகள்

    ஆண்டிப்பட்டியில் விவசாயியிடம் நிலம் மோசடி செய்த அண்ணன்-தம்பி
    X

    ஆண்டிப்பட்டியில் விவசாயியிடம் நிலம் மோசடி செய்த அண்ணன்-தம்பி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆண்டிப்பட்டியில் விவசாயியிடம் நிலம் மோசடி செய்த அண்ணன்-தம்பி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் எட்வர்டு இன்பராஜ் (வயது 60). விவசாயி. கதிர்நரசிங்கா புரத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மாரியப்பன், வேல்முருகன் 2 பேரும் எட்வர்டு இன்பராஜிடம் தங்களுக்கு சொந்தமான 24 செண்ட் ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது. அதனை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து எட்வர்டு இன்பராஜ் குறிப்பிட்ட தொகை கொடுத்து நிலத்தை வாங்கினார். இதை பதிவு செய்வதற்காக தாலுகா அலுவலகம் சென்ற போது அந்த நிலம் வேறு ஒருவர் பெயரில் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மாரியப்பன் மற்றும் வேல்முருகனிடம் இது குறித்து கேட்டார்.

    அவர்கள் உங்கள் பணத்தை 3 மாதத்தில் திருப்பி கொடுத்து விடுகிறோம் என கூறியுள்ளனர்.

    கெடு முடிந்த பின்பும் பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் எட்வர்டு இன்பராஜ் மீண்டும் அவர்களிடம் பணம் கேட்டு சென்றார். ஆத்திரமடைந்த அண்ணன் தம்பி 2 பேரும் எட்வர்டு இன்பராஜை தகாத வார்த்தையால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி.உத்தரவின்படி ஆண்டிப்பட்டி போலீசார் வேல்முருகன் மற்றும் மாரியப்பன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×