என் மலர்
செய்திகள்

வடபழனி ஓட்டலில் கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் பணம் மோசடி- 2 பேர் கைது
பொருட்கள் தருவதாக வடபழனி ஓட்டலில் கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் பணம் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைதானார்கள்.
போரூர்:
சென்னை சூளை மேட்டைச் சேர்ந்தவர் ஆசிப்.
இவர் வடபழனி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், “நெட் என்கிற தனியார் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரம் பணம் கட்டி உறுப்பினராக சேர்ந்தால் பொருட்கள் தரப்படும் என்றும், வேறு நபர்களை உறுப்பினர்களாக சேர்த்தால் சலுகைகள் வழங்கப்படும்” என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த நிறுவனத்தில் ரூ.3 ஆயிரம் பணம் கட்டினேன். ஆனால் பொருட்களையும் தராமல், பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்து விட்டனர் என்று புகார் செய்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் இந்த தனியார் நிறுவனம் சார்பில் ஆட்களை கூட்டி கூட்டம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் அங்கு சென்று தனியார் நிறுவன ஊழியர்களான வேளச்சேரியைச் சேர்ந்த சத்தியராஜ், அடையாறுவைச் சேர்ந்த துரை ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஓட்டல்களில் அனுமதி பெறாமல் ஆட்களை கூட்டி மல்டிலெவல் மார்க்கெட்டிங் என்கிற பெயரில் தனியார் நிறுவனங்கள் ரூ.3 ஆயிரம் பணம் கட்டி உறுப்பினராக சேர்ந்தால் பொருட்கள் தரப்படும். உறுப்பினர்கள் சேர்ப்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று மோசடி வாக்குறுதிகளை கூறி பொதுமக்களிடம் பணம் வசூலிப்பது விசாரணையில் தெரிய வந்தது.
எனவே இதுபோன்ற போலி நிறுவனங்களிடம் இருந்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். அந்த நிறுவனங்கள் பற்றி தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Next Story