என் மலர்
செய்திகள்

சிகிச்சை பெற்று வீடு திரும்பியபோது உயர்கோபுர மின்கம்பத்தில் கார் மோதி முதியவர் பலி
சிகிச்சை பெற்று வீடு திரும்பியபோது உயர்கோபுர மின்கம்பத்தின் மீது கார் மோதிய விபத்தில் சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
வேலூர்:
காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 62). உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், நாட்டு வைத்தியம் பார்ப்பதற்காக மனைவி மற்றும் உறவினர்களுடன் கர்நாடகா மாநிலத்திற்கு காரில் சென்றிருந்தார். இவரது மகன் சசிகுமார் காரை ஓட்டினார். வைத்தியம் பார்த்துவிட்டு நேற்று காலை காட்பாடிக்கு வந்து கொண்டிருந்தனர்.
காட்பாடி - திருவலம் சாலையில் அவருடைய வீட்டின் அருகே வந்தபோது திடீர் என்று கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள உயர்கோபுர மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி மோகனா, மகன் சசிகுமார் மற்றும் தமிழரசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து காட்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story