என் மலர்
செய்திகள்

மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் 8 பவுன் நகை பறிப்பு
திருப்பூர்:
திருப்பூர் பழைய ராமகிருஷ்ணாபுரம் துண்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (வயது 48). இவர் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று பள்ளி முடிந்து தனது மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். குத்தூஸ்புரம் பிரிவு அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென வளர்மதி அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர்.
ஆசிரியை வளர்மதி திருடன்.. திருடன்.. என சத்தம் போட்டார் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்களை விரட்டிச் சென்றனர், ஆனால் மர்ம நபர்கள் விரைந்து சென்று மறைந்து விட்டனர்.
இது தொடர்பாக வளர்மதி திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்றவர்களை தேடி வருகின்றனர்