என் மலர்
செய்திகள்

திருமங்கலம்- டி.கல்லுப்பட்டியில் தொழிலாளி உள்பட 2 பேர் விபத்தில் பலி
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள கட்ராம்பட்டியை சேர்ந்தவர் வரதராஜப்பெருமாள் (வயது 40). ஓட்டல் தொழிலாளியான இவர் இன்று அதிகாலை திருமங்கலம் தியேட்டர் பகுதியில் உள்ள ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வரதராஜப்பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கதிரேசன் மகன் பாலாஜி (25). இவரும் உத்தங்குடியை சேர்ந்த செல்லப்பாண்டியும் (23) மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்துக்கு புறப்பட்டனர். டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தாதங்குளம் விலக்கில் வந்தபோது. எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே இறந்தார். செல்லப்பாண்டி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிசை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தோப்பூர் கிழக்கு தெருவை சேர்ந்த டிரைவர் ராஜா (33) என்பவரை கைது செய்தனர்.






