என் மலர்tooltip icon

    செய்திகள்

    கானாத்தூர் அருகே டிரான்ஸ்பார்மரில் கார் மோதல் - கல்லூரி மாணவர் பலி
    X

    கானாத்தூர் அருகே டிரான்ஸ்பார்மரில் கார் மோதல் - கல்லூரி மாணவர் பலி

    கானாத்தூர் அருகே டிரான்ஸ்பார்மரில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
    திருவான்மியூர்:

    பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் விக்னேஷ்வரன் (வயது 21). இவரது சொந்த ஊர் மதுரை.

    நேற்று மாலை அவருடன் படிக்கும் நண்பர்கள் நித்யகணேஷ், நாராயணன், வெற்றி, ரீனிக்ஸ், பாலசுப்பிரமணி ஆகியோருடன் மாமல்லபுரத்துக்கு காரில் சென்றார். பின்னர் நள்ளிரவு அவர்கள் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    கானாத்தூர் அருகே வந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் மீது மோதாமல் இருக்க காரை திருப்பினர். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதியது.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த விக்கேஷ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் இருந்த நித்யகணேஷ், நாராயணன், வெற்றி, ரீனிக்ஸ், பாலசுப்பிரமணி ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கார் மோதிய வேகத்தில் டிரான்ஸ்பார்மரின் ஒரு பக்க கம்பம் உடைந்து சரிந்தது. அதிர்ஷ்டவசமாக டிரான்ஸ்பார்மரில் இருந்த மின் கம்பிகள் அறுந்து விழாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×