என் மலர்

  செய்திகள்

  போலீஸ் என்கவுண்ட்டரில் பலியான ரவுடி ஆனந்தன் பிரேத பரிசோதனை
  X

  போலீஸ் என்கவுண்ட்டரில் பலியான ரவுடி ஆனந்தன் பிரேத பரிசோதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போலீஸ் என்கவுண்ட்டரில் பலியான ரவுடி ஆனந்தன் பிரேத பரிசோதனை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நேற்று நடந்தது.
  சென்னை:

  சென்னை ராயப்பேட்டையில் போலீஸ்காரர் ராஜவேலுவை (வயது 35) அரிவாளால் வெட்டிய வழக்கில் ராயப்பேட்டை பி.எம்.தர்கா பகுதியை சேர்ந்த 9 ரவுடிகள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இதில் ஆனந்தன் (25) என்ற ரவுடி, போலீஸ்காரர் ராஜவேலுவின் ‘வாக்கி-டாக்கி’யை திருடி தரமணி பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள புதர் பகுதியில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

  இதையடுத்து கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆகியோர் ரவுடி ஆனந்தனை மட்டும் தனியாக போலீஸ் ஜீப்பில் தரமணி பகுதிக்கு அழைத்து சென்றனர்.

  சம்பவ இடத்தில் ‘வாக்கி-டாக்கி’யை எடுக்கும்போது, ரவுடி ஆனந்தன் அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென்று சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவின் கையை வெட்டினார். பின்னர் உதவி கமிஷனர் சுதர்சனத்தையும் தாக்க முயன்றார். இதையடுத்து அவர் மீது ‘என்கவுண்ட்டர்’ பிரயோகம் நடத்தப்பட்டது. உதவி கமிஷனர் சுதர்சன் ரவுடி ஆனந்தனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவரது இடதுபக்க மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் அவர் பலியானார்.

  இதையடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இரவோடு இரவாக அவரது உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறைக்கு மாற்றப்பட்டது.


  ரவுடி ஆனந்தன் உடலை பார்ப்பதற்காக வந்த மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன்


  தமிழகத்தில் நடைபெறும் ‘என்கவுண்ட்டர்’ சம்பவங்களை பொறுத்தவரையில் அரசு சார்பில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும். அதன்படி ரவுடி ஆனந்தன் என்கவுண்ட்டர் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சைதாப்பேட்டை கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன் நியமிக்கப்பட்டார்.

  அவர் உடனடியாக விசாரணை களத்தில் இறங்கினார். தரமணியில் என்கவுண்ட்டர் நடந்த இடத்தை நேற்று காலை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மதியம் 12.20 மணியளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டிருந்த ரவுடி ஆனந்தன் உடலை வந்து பார்வையிட்டார். ஆனந்தன் உடலை அவரது சகோதரர் அருண், சித்தப்பா மனோகரன் ஆகியோர் மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன் அடையாளம் காட்டினார்.

  பின்னர் ஆனந்தன் உடலில் எத்தனை குண்டுகள் பாய்ந்திருக்கிறது? என்பதை கண்டறிவதற்காக முதலில் ‘எக்ஸ்-ரே’ எடுக்கப்பட்டது. இதில் அவரது இடது பக்க மார்பு பக்கத்தின் உள்ளே ஒரு குண்டு மட்டும் இருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து ரவுடி ஆனந்தனின் பிரேத பரிசோதனை மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை நடந்தது. மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன் முன்னிலையில் உடல்கூறு அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் செல்வநாயகம், டாக்டர் குகன் ஆகியோர் பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

  பிரேத பரிசோதனையின்போது ரவுடி ஆனந்தன் உடலை துளைத்திருந்த துப்பாக்கி குண்டு வெளியே எடுக்கப்பட்டு, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

  ரவுடி ஆனந்தன் உடல் பிரேத பரிசோதனையையொட்டி, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவரது வீடு அமைந்துள்ள ராயப்பேட்டை வி.எம்.தர்கா, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை வளாகம், ராயப்பேட்டை போலீஸ்நிலையம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
  Next Story
  ×