என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
Byமாலை மலர்16 Jun 2018 9:11 PM GMT (Updated: 16 Jun 2018 9:11 PM GMT)
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. #Meteorological #Rain
சென்னை:
தென்மேற்கு பருவமழை கர்நாடகா, லட்சத்தீவு பகுதியில் தீவிரம் அடைந்து அநேக இடங்களில் பெய்து வருகிறது. அதேபோல், கேரளா, வட மற்றும் உள் கர்நாடகா பகுதிகளிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தென்மேற்கு பருவமழை காலங்களில் குறைவான மழைப்பொழிவைத் தான் பெறும்.
ஆனால் அந்த காலக்கட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும். அந்தவகையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
வட தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் காற்றுடன், இடி மின்னலும் இருக்கும். தமிழக கடலோர பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கிறது. மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. தென் தமிழக கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோர மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற 20-ந்தேதி வரை (4 நாட்களுக்கு) ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்வதற்கு வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-
கும்மிடிப்பூண்டி 9 செ.மீ., எண்ணூர், பள்ளிப்பட்டில் தலா 3 செ.மீ., வடசென்னை, தளி, விரிஞ்சிபுரத்தில் தலா 2 செ.மீ., சென்னை விமானநிலையம், ஆர்.கே.பேட்டை, திருத்துறைப்பூண்டி, மேல் ஆலத்தூர், சென்னை டி.ஜி.பி. அலுவலகம், வாலாஜா, தாம்பரம், ஒரத்தநாடு, கேளம்பாக்கம், காஞ்சீபுரத்தில் தலா ஒரு செ.மீ. மழை.

Next Story
×