என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயங்கொண்டம் அருகே சிறுமி மர்ம மரணம்
Byமாலை மலர்10 Jun 2018 4:17 PM GMT
ஜெயங்கொண்டம் அருகே பாட்டி வீட்டில் வசித்து வந்த சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார் பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் அன்னப்பூரணி (வயது13). உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம்வகுப்பு படித்து வந்தாள். தாய் தந்தை இல்லாத நிலையில் தனது பாட்டியுடன் வசித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று அன்னப்பூரணி வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினாள்.
இது குறித்த தகவல் அறிந்ததும் உடையார் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அன்னப்பூரணி எப்படி இறந்தாள் என்று தெரியவில்லை.
உறவினர் ஒருவர் அவளை சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் அவர் தூக்குப்போட்டுதற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×