search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்ஜினீயரிங் சேர்க்கை -  சான்றிதழ் சரிபார்க்க தினமும் 20 ஆயிரம் மாணவர்களுக்கு அழைப்பு
    X

    என்ஜினீயரிங் சேர்க்கை - சான்றிதழ் சரிபார்க்க தினமும் 20 ஆயிரம் மாணவர்களுக்கு அழைப்பு

    பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு விண்ணிப்பத்திருந்த மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி நாளை 42 யைமங்களில் தொடங்குகிறது. 20 ஆயிரம் மாணவர்கள் வீதம் தினமும் அழைக்கப்படுகிறார்கள். #Engineering #AnnaUniversity
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சேருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் கலந்தாய்வு முறையினை இந்த ஆண்டு முதன் முதலாக செயல்படுத்துகிறது.

    இணைய தளம் வழியாக ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு ரேண்டம் எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

    மாணவர்கள் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த 42 உதவி மையங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அந்த மையங்களுக்கு சென்று இணைய தளம் வழியாக கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ள முடியும். முதல் கட்டமாக மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நாளை (8-ந்தேதி) தொடங்கி 14-ந்தேதி வரை ஒரு வாரம் நடக்கிறது.

    சென்னையில் மட்டும் 17-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரி பார்ப்பதற்கு எந்தெந்த தேதியில் எந்த நேரத்தில் வர வேண்டும் என்பது குறித்த தகவல் மாணவர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது.

    தினமும் 20 ஆயிரம் மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தகவல் அனுப்பப்படுகிறது. தேதி, நேரம், டோக்கன், எண் போன்ற விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்புகின்றனர்.

    இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:-


    20 ஆயிரம் மாணவர்கள் வீதம் தினமும் அழைக்கப்படுகிறார்கள். மாணவர்கள் எந்த தேதியில், எந்த நேரத்திற்கு உதவி மையத்திற்கு வர வேண்டும் என்ற தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படுகிறது. அதில் குறிப்பிட்டுள்ள காலத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மாணவர்கள் உதவி மையம் வந்துவிட வேண்டும்.

    எஸ்.எம்.எஸ். தவிர இ.மெயில் மூலமாகவும் இந்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னையில் அண்ணா பல்லைக்கழகம், காஞ்சீபுரத்திற்கு எம்.ஐ.டி., திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆவடி முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை உதவி மையங்களாக செயல்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விண்ணப்பதாரர்கள் வேறு ஏதாவது கல்வி நிறுவனங்களில் சேர்ந்து இருந்து ஒரிஜினல் சான்றிதழ் அங்கு இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தில் இருந்து கடிதம் பெற்று வர வேண்டும். மேலும் அந்த சான்றிதழ்களின் நகல்களில் நிறுவனத்தின் முத்திரையிட்டு உரிய அதிகாரி கையெழுத்து பெற வேண்டும்.

    ஆனாலும் ஒரிஜினல் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படும் வரை ஒரிஜினல் ஒதுக்கீட்டு ஆணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். அதனால் கலந்தாய்வில் ஒதுக்கீட்டு கடிதம் பெறும் வரையில் மாற்று சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் வர முடியாத பட்சத்தில் பெற்றோர்கள் பங்கேற்கலாம். மாணவர்கள் போட்டோவுடன் கூடிய கடிதத்தை பெற்றோர் சமர்பிக்க வேண்டும். பெற்றோர்களும் தங்களுடைய ஓட்டுனர் உரிமம், பான்கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாளமாக காண்பிக்க வேண்டும்.

    மாணவர்கள் தங்கள் ஒரிஜினல் சான்றிதழ்களை கொண்டு வந்து சரிபார்த்து கொள்ள வேண்டும். சான்றிதழ் சரி பார்ப்புக்கு 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பிளஸ்-2 ஹால் டிக்கெட், மாற்று சான்றிதழ் (டி.சி.), ஜாதிச்சான்று, குடியுரிமை சான்று, வருவாய் சான்று, சிறப்பு சலுகை பெறக்கூடியவர்கள் அதற்கான சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். #Engineering #AnnaUniversity
    Next Story
    ×