search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் மதிப்பெண் அடிப்படையில் 3355 எம்.பி.பி.எஸ். இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்
    X

    நீட் மதிப்பெண் அடிப்படையில் 3355 எம்.பி.பி.எஸ். இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்

    நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 3355 எம்.பி.பி.எஸ் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. #NEET #NEET2018
    சென்னை:

    எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மாணவி கீர்த்தனா 720க்கு 676 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 12-வது இடம் வகித்தார். சென்னை கே.கே.நகரை சேர்ந்த அந்த மாணவி தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    தொழில் மற்றும் கல்வி வளர்ச்சியில் பின் தங்கிய பல மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். பீகார், ராஜஸ்தான், அரியானா, குஜராத், பஞ்சாப், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை விட தமிழகம் நீட் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கியுள்ளது.

    நீட் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற 11-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 19-ந்தேதி கடைசி நாளாகும் தரவரிசை பட்டியல் 28-ந்தேதி வெளியிடப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி தொடங்கி 5-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2900 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருக்கின்றன. அதில் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடான 455 இடங்கள் போக மீதமுள்ள 2445 எம்.பி.பி.எஸ் இடங்கள் நீட் தேர்வு கட்-ஆப் மார்க் மற்றும் இன ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இதுதவிர 10 தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 783 மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 127 இடங்கள் என மொத்தம் 3355 எம்.பி.பி.எஸ் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.


    இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவக் குழு செயலாளர் டாக்டர் செல்வராஜன் கூறியதாவது:-

    அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2900 மொத்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு போக மீதமுள்ள 2445 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழக இடங்களும் முதல் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

    ஒரு சில தனியார் மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் கேட்டு இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பித்துள்ளன.

    மதுரை, நெல்லை அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 100 இடங்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரிகளில் 50 இடங்களும் கூடுதலாக அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். 250 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைத்தால் இந்த வருடம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதல் வாய்ப்பாக அமையும்.

    கடந்த ஆண்டு இரட்டை குடியுரிமையுடன் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களால் பிரச்சனை எழுந்து. இந்த ஆண்டு அதுபோன்ற நிலை உருவாகாது. மருத்துவ படிப்பிற்கான வழிகாட்டுதல் கையேட்டில் அதுபற்றி தெளிவான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    அதையும் மீறி முறைகேடாக மாணவர் சேர்க்கை பெற முயன்றால் கடும் நடவடிககை எடுக்கப்படும்.

    மருத்துவ படிப்பில் சேரக்கக்கூடிய மாணவர்கள் 2 மாநிலத்தில் கூட விண்ணப்பிக்கலாம். உதாரணத்திற்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் புலம் பெயர்ந்து இருந்தால் கர்நாடகாவிலும், தமிழகத்திலும் விண்ணப்பிக்கலாம்.

    ஆனால் கர்நாடகவில் மட்டும் தான் குடியுரிமை சான்றிதழை விண்ணப்பிக்க முடியும். தமிழகத்தில் குடியுரிமை சான்று முறைகேடாக பெற்று விண்ணப்பித்து இருந்தால் அது தவறாகும்.

    இதுபோன்ற தவறுகளை கடந்த வருடம் விண்ணப்பித்தவர்கள் செய்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு இரட்டை குடியுரிமையுடன் விண்ணப்பித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.   #NEET #NEET2018
    Next Story
    ×