என் மலர்
செய்திகள்

ரஜினி இன்றைக்கு இருப்பார், நாளைக்கு இருப்பாரா? என அவருக்கே தெரியாது- சுப்பிரமணியசாமி
ரஜினி இன்றைக்கு இருப்பார், நாளைக்கு இருப்பாரா? என அவருக்கே தெரியாது என்று சுப்பிரமணியசாமி கூறினார். #Rajinikanth #SubramanianSwamy
அவனியாபுரம்:
பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் வருத்தம் தெரிவிக்காதது முழுமையான அறிக்கை கிடைக்காததால்தான்.
அங்கு இறந்தவர்கள் பாமர மக்களா? விடுதலைப்புலிகளா? நக்சலைட்டுகளா என்ற விவரம் தெரியவேண்டும். இந்த போராட்டத்தில் தீவிரவாதிகள் நுழைந்திருக்கலாமா? என்று சிலர் கேட்கிறார்கள்.
மக்களை ஏமாற்ற ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் அவர்கள் ஸ்டெர்லைட் ஊழியர்களின் குடியிருப்புகளில் புகுந்து தீ வைத்து எரித்துள்ளனர். பூட்டு போட்டுள்ளனர்
மத்திய அரசுக்கு எதிராக தனிப்பட்ட கட்சிகள் செயல்படுகின்றன. அரசு கொண்டு வரும் திட்டங்களை ராஜ்யசபாவில் தி.மு.க. எதிர்க்கிறது.
வீரன் மாதிரி வசனம் பேசிய சீமான் காணாமல் போய்விட்டார். அவருக்கு வாரண்ட் இருக்கு. போலீசாரால் கைது செய்யப்படுவார். ரஜினி இன்றைக்கு இருப்பார். நாளைக்கு இருப்பாரா? என அவருக்கே தெரியாது. நான் அரசியல்வாதி. இங்கே தான் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #SubramanianSwamy
Next Story






