search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே கோஷ்டி மோதல் - வீடுகள் சூறை
    X

    திண்டுக்கல் அருகே கோஷ்டி மோதல் - வீடுகள் சூறை

    திண்டுக்கல் அருகே இடப்பிரச்சினையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வீடுகள் சூறையாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள வேங்கனூரைச் சேர்ந்த சின்னத்தம்பி மனைவி கருப்பாயி (வயது 40). இவர் தனது தாய் செல்லம்மாள் எழுதிக் கொடுத்த பூர்வீக சொத்தில் விவசாயம் செய்து வருகிறார். அந்த இடப்பிரச்சினையில் சின்னத்தம்பிக்கும் அவரது உறவினர் குமரன் குடும்பத்துக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    நேற்று மாலை தனது மகள் மாரியம்மாள் (18) என்பவர் திருமண வி‌ஷயம் தொடர்பாக பேசுவதற்காக சின்னத்தம்பி குடும்பத்தினர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது குமரனின் மகன்கள் முருகன், சக்திவேல், பரமசிவம் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் அங்கு வந்தனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர கோஷ்டி மோதல் ஏற்பட்டது. குமரன் தரப்பினர் கம்பு மற்றும் ஆயுதங்களால் தாக்கியதில் கருப்பாயி (40), குமரவேல் (55), மாரியம்மாள் (18), காளியம்மாள் ஆகியோர் படுகாயமடைநதனர்.

    அவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மோதலில் சின்னத்தம்பி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அங்கு பர பரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வீடுகளை சூறையாடியது தொடர்பாக சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×