என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    திருமங்கலம் அருகே வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

    திருமங்கலம் அருகே வியாபாரி வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்துக்குட்பட்ட வி.டி.மணி நகரைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது65). பழைய இரும்ப பொருட்கள் வாங்கி விற்று வருகிறார்.

    இவர் கடந்த 24-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கும்பகோணம் சென்றார். இன்று அதிகாலை அவர்கள் வீடு திரும்பினர். வீட்டிற்குள் சென்றபோது பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கள்ளிக்குடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் பின்பக்க கிரீல்கேட்டை உடைத்து உள்ளே வந்த மர்ம மனிதர்கள் ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டிற்குள் புகுந்திருப்பது தெரிய வந்தது.

    வீட்டின் பீரோவில் இருந்த 2½ பவுன் தங்க நகைகள், ரூ.4 ஆயிரத்து 500 மற்றும் 1 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் கணேஷ் தெரிவித்தார்.

    இதே பகுதியில்தான் அரசு என்ஜினீயர் வீட்டில் நேற்று கொள்ளை சம்பவம் நடைபெற்றது. தற்போது வியாபாரி வீட்டிலும் அதே போன்று சம்பவம் நடை பெற்று இருப்பது மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    2 வீடுகளிலும் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு இருப்பதால் ஒரே கும்பல் தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×